தொலைபேசிகளின் பதிவினை சரிபார்க்குமாறு அறிவுறுத்தல்!

சிம் அட்டையினால் செயற்படும் தொலைத் தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்தல் அல்லது ஏதாவது சேவைகளை இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திர உரிமைத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொலைத்தொடர்புகள்‌ ஒழுங்குபடுத்தும்‌ ஆணைக்குழு (இ.தொ. ஓ. ஆ) இல்‌புதிவு செய்து கொண்டுள்ள தொலைத்தொடர்பு உபகரணங்களை மட்டும்‌ பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்படும்‌ அறிவித்தல்‌

சிம் அட்டையினால்‌ செயற்படும்‌ தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்தல்‌ அல்லது ஏதாவது சேவைகளை இ.தொ. ஓ. ஆ. ஆல் வழங்கப்படும்‌ அனுமஇப்பத்துர உரிமத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்து மட்டும்‌ பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு இத்தால்‌ அறிவிக்கப்படுஇன்றது.

2. மேற்பட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு முன்‌ இ.தொ. ஓ. ஆ ஆல்‌ அனுமதிக்கப்பட்டுள்ள தொடர்‌ இலக்கத்தைப்‌ பரீட்‌சித்துப்‌ பார்க்கவும்‌. (தொடர் இல. TRC20/……../……….]

3. அது சரியானதா என உறுது செய்து கொள்வதற்கு

IMEI<space><15Digit IMEI number> type செய்து 1909 இற்கு SMS செய்யவும்‌

Ex: IMEI 215489652321457

4. இ.தொ. ஓ. ஆ. இலிருந்து பதிலாக இடைக்கப்பெறும்‌ குறுந்தகவலின்‌ பிரகாரம்‌
செயற்படவும்‌.

5, இ.தொ. ஓ. ஆ. பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள்‌ சிம்‌ அட்டையினால்‌ செயற்படும்‌) தொலைத்தொடர்பு வலையமைப்புடன்‌ இணைக்கப்படுதல்‌ விரைவில்‌ நிறுத்தப்படும்‌.

6. தற்போது கையடக்கத்‌ தொலைபே௫ வலையமைப்புடன்‌ இணைக்கப்பட்டுள்ள மேற்படி உபகரணங்களுக்கு இது ஏற்புடையதாகாது என்பதுடன்‌ அந்த உபகரணங்களை விரைவில்‌ பதிவு செய்து கொள்வதற்கு இ.தொ. ஓ. ஆ.
நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌.

Read:  மீண்டும் ரணில் !!

நீங்கள்‌ மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள பின்வரும்‌ இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்‌

பணிப்பாளர்‌ / ஸ்பெக்ட்ரம்‌ முகாமைத்துவம்‌

தொலைபேடு இல :011 2675779
தொலை நகல்‌ இல : 0112689675
இயக்குனர்‌ உதவி : 1900

பாவனையாளர்கள்‌ போலியான உபகரணங்களைக்‌ கொள்வனவு செய்வதை தவிர்த்துக்கொள்வதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள்‌ ஒழுங்குபடுத்தும்‌ ஆணைக்குழுவினால்‌ மேற்கொள்ளப்படும்‌ நடவடிக்கையாகும்‌.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day