பொதுஜன பெரமுன 30 வருடங்கள் ஆட்சியில் இருக்கும் – அலி சப்ரி

ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனை கட்சி அடுத்த 20 வருடம் அல்லது 30 வருடங்கள் தொடா்ந்தும்ஆட்சியிலேயே இருக்கும். இந்த நாட்டில் ஜ.தே.கட்சி முகவரி இல்லாமல் சென்று விட்டது முஸ்லிம்களாகிய நாம் கடந்த காலங்களில் தொடா்ந்தும் ஜ.தே.கட்சியையே ஆதரித்து வந்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதித் தோ்தலில் நாம் 68வீதம் மான வாக்குகளை பெருவோம் . என சொன்னோம். அது 69 வீதத்திற்கு மக்கள் வாக்களித்திருந்தாா்கள். பாராளுமன்றத் தோ்தலில் 137 உறுப்பிணா்களை பெருவோம். எனக் கூறினோம். சிலா் அதனை ஏளனமாக 95 உறுப்பிணா்களே பெறுவாா்கள் என சொன்னாா்கள். ஆனால் நாம் 150 உறுப்பிணா்களைப் இம்முறை பெற்றுள்ளோம்.என நீதியமைச்சா் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்தாா்.

தெகிவளை ரோஸ் வுட் வரவேற்பு மண்டபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் முஸ்லிம் பிரிவு ஏற்பாட்டில் பொதுஜன பெரமுனை பாராளுமன்ற உறுப்பிணா்களை கௌரவிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்துத. இந் நிகழ்வு 16.08.2020 நடைபெற்றது. இந் நிகழ்வினை முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் உவைஸ் காஜியாா் ஏற்பாடு செய்திருந்தாா். வன்னி பாராளுமன்ற உறுப்பிணா் காதா் மஸ்தானும் வருகை தந்திருந்தாா். ஜனாதிபதி சட்டத்தரணி ராசீக் சருக், ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மிலும் இங்கு உரையாற்றினாாா்கள்.

தொடா்ந்து இங்கு உரையாற்றிய அலி சப்ரி

கடந்த ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் எமது கட்சிக்கு 5 வீதம் மட்டுமே வாக்களித்தாா்கள், இம்முறை பாராளுமன்றத் தோ்தலில் 27வீதம் முஸ்லிம்கள் வாக்களித்துள்ளா்கள். வட கிழக்கினை தவிர ஏனைய பகுதிகளில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் 35வீதம் வாக்களித்துள்ளாா்கள்.

இம்முறை குருநாகலில் ஆளுனா் முஸம்மில் அவா்களது பாரியாரும் இணைந்து பல முஸ்லிம் பெண்களிடம் சென்று பிரச்சாரம் செய்து பல முஸ்லிம் கிராமங்களில் வாழும் முஸ்லிம்கள் எமக்கு வாக்களித்துள்ளாா்கள். குருநாகளில் ஆளுனா் முஸம்மில் தோ்தல் கேட்பதற்கு ஆசையாக இருந்தாா். அதனை வேண்டாம் எனச் சென்னேன். அவா் தோற்று இருந்தால் ஆளுனா் பதவியை இழந்திருப்பாா். அதே போன்றுதான் மர்ஜான் பளீள் களுத்துறை தோ்தல் கேட்பதற்கு ஆயத்தமாக இருந்தாா்.அதனையும் வேண்டாம் எனச் சொன்னேன். அவா் தேசிய பட்டியல் வர வாய்ப்பளிக்கப்பட்டது. அவா் தோ்தல் கேட்டு இருந்தால் தோற்று இருப்பாா்.  

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

நான் ஒருபோதும் அமைச்சுப் பதவியை எதிா்பாா்த்தவன் அல்ல எனக்கு இந்தப்பதவிக்கு பல எதிா்ப்புக்கள் எழுந்தபோதும் அமைச்சா்களுக்கு பதவி வழக்கும் முன்னைய நாள் நான் ஜனாதிபதியை சந்தித்து தனக்கு அமைச்சா் பதவி வேண்டாம். பல எதிா்ப்புக்கள் இருந்தாள் என்னை விட்டுவிடுங்கள் என்றேன். ஜனாதிபதி அவா்கள் உறுதியாகக் கூறிவிட்டாா்கள் அலி சப்ரி நீர் இந்த அரசின் ஒரு கபிணட் அமைச்சராக கட்டாயம் இருக்க வேண்டும். அதனை தீா்மாணிப்பது நான் நீர் தேசிய ரீதியாக இலங்கை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எனக் கண்டிப்பாக கேட்டுக் கொண்டாா். ஆகவே இந்தக் கட்சியில் 3 முஸ்லிம்கள் தேசிய பட்டியலும் ஒரு கபிணட் அமைச்சினையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும், பிரதம மந்திரி மகிந்திரி ராஜபக்சவும் இந்த கட்சியையும் அரசினையும் திறம்பட திட்டமிடும் பசில் ராஜபக்சவும் இ்ந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமுகத்தினை மீண்டும் கௌரவித்துள்ளனா் நாம் தொடா்ந்து துரோகம் செய்தாலும் அவா்கள் இன்னும் முஸ்லிம்களை நம்புகின்றனா். 

எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு கட்சி வெற்றிபெற்றால் ஒன்று சோ்ந்து பதவிகளை பெற்று சகலதையும் அனுபவித்துவிட்டு தோற்றவுடன் காலை வாரிவிடுவாா்கள். இதனை நன்கு அறிந்து வைத்துள்ளாா். பசில் ராஜபக்ச அவா்கள் . நேற்று முன்தினம் ஒருவரை அழைத்துக் கொணடு அவருடன் பேசுவதற்காகச் சென்றேன. அச்சமயத்தில் இக்கதையைக் கூறினாா். முஸ்லிம்களுக்கு பயங்கரவாதப் பிர்சினையில் இருந்து தீர்த்து அவா்களுக்கு சிறந்த அபிவிருத்திகளை நாம் செய்தோம். அவா்கள் இறுதிக்கட்டத்தில் எங்களை கைவிட்டுவிட்டாா்கள் என பசில் ராஜபக்ச கவலையாகக் தன்னிடம் கூறினாா்.

தமிழா்கள் இனரீதியாக தமிழ் கட்சிகளையும் இயக்கங்களையும் ஏற்படுத்தினாா்கள். அதனால் அநியாயமாக 60 ஆயிரம் தமிழ் இளைஞா் யுவதிகளை ்இழந்துள்ளாா்கள். 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட படித்த தமிழா்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயா்ந்து பலவேறு நாடுகளில் வாழ்கின்றாா்கள்.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!

அந்த வகையில் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்கள் முஸ்லிம்களது குரல் ஒலிக்காத காரணத்தினால் முஸ்லிம் கட்சியை ஆரம்பித்து முஸ்லிம் இளைஞா்களை ஆயுதக் கலாச்சாரத்தில் இருந்து விலக்கி ஒன்று படுத்தினாா். இறுதியில் அவா் இன ரீதியான முஸ்லிம் கட்சியை தவிா்த்து சகல இனங்களையும் சோ்த்துக் கொண்டு செல்லக்கூடியவாறு தேசிய ஜக்கிய முன்னனி நுஆ என்ற கட்சியை ஆரம்பித்துச் சென்றாா்கள் அவருக்குப் பிறகு வந்த முஸ்லிம் தலைமைகள் இனரீதியாக இனத்துவேசத்தினை வளா்த்து கட்சியைக் கொண்டு முஸ்லிம்களை வேறாக்கிச் செல்கின்றனா். அடுத்த 5 வருட கால ஆட்சியில் நாம் பல சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் இறைவன் எம்மைக் கைவிடமாட்டான். எதிா்காலத்தில் நாம் ஆளும் கட்சியில் இணைந்து மேலும் இக்கட்சிக்கு பலத்தைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். என அமைச்சா் அலி சப்ரி அ்ங்கு உரையாற்றினாா்.

SOURCE(அஸ்ரப் ஏ சமத்) JaffnaMulslim