டெல்ட்டா தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து- வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்ட்டா வைரஸ் திரிபுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் எனவும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தினுள் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 20இற்கும் மேற்பட்டோருக்கு அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அபாயநிலை காரணமாக, எவருக்கேனும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகள் வெளிக்காட்டும் பட்சத்தில், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பது சாலச்சிறந்தது என வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். -தமிழன்.lk-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price