மருத்துமனைகள் பலவற்றிலும் கொரோனா நோயாளர்களால் இடநெருக்கடி!

கொழும்பு தேசிய மருத்துவமனை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக அறியமுடிகிறது.

கொழும்பு தேசிய மருத்துவமனை, ராகம, களுபோவில, காரபிடிய, கம்பஹா, இரத்தினபுரி உள்ளிட்ட பல மருத்துவமனைகளும் இவ்வாறு கொரோனா நோயாளர்களால் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளன.

இவர்களில் கணிசமான நோயாளர்களுக்கு ஒட்சிசன் தேவைப்பாடு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வார்ட் அறைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வருவதன் காரணமாக, புதிதாக மேலதிக வார்ட்டுகளை அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். -தமிழன்.lk-

Read:  ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான