பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இலங்கையர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சவால்களை பலர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒன்றாக “Photo Challenge” என்ற சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. #24hours, #onelove, #myphoto, #womenpower என்ற Hash tagகளும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

அந்த சவாலில் முக்கிய இலக்காக இருப்பது பெண்களின் புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் பதிவாகும் புகைப்படங்களை Hashtag மூலம் ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பெறும் பல்வேறு பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி டேட்டிங் மற்றும் வயது வந்தவர்களுக்கு மாத்திரம் உள்ள வலைத்தளங்களுக்கு பயன்படுத்தும் ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் சவால்களுக்காக புகைப்படங்களை பகிர்வதனை பெண்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters