நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டை -கெய்ஸர் வீதியில் விற்பனை மற்றும் இதர வணிக நடவடிக்கைகள் வழமை நாட்களைப் போலவே இடம்பெற்று வருவதை இன்று (25) அவதானிக்க முடிந்தது.




நாட்டில் கடந்த 20 ஆம் திகதி முதல் கொரோனா தொற்றின் காரணமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு, புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் இன்று புதன்கிழமை மொத்த வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை எமது அலுவலக புகைப்படவியலாளரின் கமெராவில் சிக்கியது.
(ஜே.சுஜீவகுமார்)
வீரகேசரி & தமிழன்.lk