Getty Images

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை

ஐ.நா தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட் – 19 தொற்று உள்ளது இத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு வெளியேறாமல் இருத்தல் உள்ளிட்ட அறிவுரைகளை பின்பற்றுவதை பொறுத்தே இந்த கணிப்பு நிஜமாகுமா அல்லது இந்த கணிப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுமா என்பது தெரிய வரும் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page