கொவிட் தொற்று மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய முறை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சி வெளியிட்டிருந்த அறிவுறுத்தல்களை செயற்படுத்தி இருந்தால், அர்ப்பணிக்க தயாராகுங்கள் என நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவல நிலை ஒருபோதும் ஜனாதிபதிக்கு எற்பட்டிருக்காது என ஜக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக நாட்டை தொடர்ந்து முடக்கவேண்டிய௰ நிலை ஏற்பட்டால், அதற்கு அர்ப்பணிக்க தயாராக வேண்டும் என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,
நாடு எதிர்கொண்டுள்ள தொற்று நிலைமை யில் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய முறை தொடர்பில் தெளிவுபடுத்தி ஐக்கிய தேசிய கட்சி 21 அம்சங்கள் அடங்கிய பிரேரணை ஒன்றை அரசாங்கத்துக்கு கையளித்திருந்தது. இதில் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பான நாடடொன்றை கட்டியெமுப்புவதற்கு தேவையான பிரேரணைகள் உள்ளடக்கப்பட்டிருகீகின்றன.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஜனாபதியை சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிப இக்கு இதனை கையளித் இருந்தார். ஏனைய கட்சிகள் போல் அல்லாமல் நாங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதுடன் எமது மாற்று வழிகளையும் தெரி விக்கின்றோம்.
மேலும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200வரை நெருங்கி இருக்கின்றது. நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்கவேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தோம். இருந்தாலும் அரசாங்கம் தாமதஇத்தாவது 10நாட்களஞுக்கு நாட்டை முடக்கு வதற்கு தீர்மானித்திருக்கின்றது. என்றாலும் வீதிக்கு சென்று பார்த்தால் பொது மக்கள் வீதிகளில் இருக்கின்றனர். நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. இவ்வாறான முடக்கத்தை நாங்கள் கோரவில்லை.
சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கும் முறையிலான முடக்கமே தேவையாகின்றது.
கடந்த வாரம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம் என்ன வென்றால், கொவிட் காரணமாக நாட்டை தொடர்ந்து முடக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அர்ப்பணிப்பதற்கு மக்கள் தயாராகுமாறு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார். அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கவேண்டி ஏற்படும். சம்பளம் வழங்க முடியாமல் போகும். அதனால் அரச ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தியாகம் செய்ய வேண்டும் என்ற விடயத்தையே ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்திருக்கின்றார். எமது அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரித்த 10ஆயிரம் ரூபாவை இல்லாமலாக்குவதற்கே இந்த திட்டமாகும்.
எமது பிரேரணையில் பொருளாதார பிரச்சி னைக்கு முகம்கொடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றால், எங்களுக்கு வேறு நாடுகளில் இருந்து நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அந்த இடத்துக்கு செல்லாமல் மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு தெரிவிக்கவேண்டாம். தங்களது உற்ற நண்பர்களுக்கு கொவிட் தொற்றின் மூலம் பணம் கொள்ளையிட இடமளிக்கவேண்டாம்.
எனவே சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்ட நாடொன்றாக எமது நாட்டை கட்டியெழுப்ப தேவையான பிரேரணைகளை நாங்கள் அரசாங்கத்துக்கு கையளித்திருகீகன்றோம். அந்த பிரேரணைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், அர்ப்பணிக்க தயாராகவேண்டும் என மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்காது என்றார்.
(எம்.ஆர். எம்.வஸீம்) வீரகேசரி