குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கே ரூ. 10,000 பொதி

இதுவரை, கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட ரூ. 10,000 பெறுமதியான பொருட்கள், இனிமேல் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலணி, இதற்கு முன்னர் சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் அனைத்து குடும்பங்களுக்கும் அதனை வழங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றையதினம் (24) பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இணைச் செயலாளர் அன்டன் பெரேராவின் கையொப்பத்துடனான சுற்றுநிருபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

சுபாஷினி சேனாநாயக்க தினகரன்

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price