அமைச்சர் நாமல் வழங்கிய முக்கிய பதவியை இராஜினாமா செய்தார் பிரபல சிங்கள பாடகர்!

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் இராஜ் வீரரத்ன, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்களாக இராஜ் வீரரத்னவும், தெஹானி இமாராவும் கடந்த வருடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழன்.lk-

Read:  20 வகை அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதி 3998 ரூபாவிற்கு !