சாராவை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை – முஜிபூர் ரஹ்மான்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபராக கருதப்படும் சாரா உயிருடன் உள்ளார் என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

சாராவை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சாரா என்ற ஒருவர் இருந்தார் என்பதை அரசாங்கம் மறந்து விட்டது. பயங்கரவாதி சஹ்ரானுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்  குறித்து அறிய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

-வீரகேசரி-(இராஜதுரை ஹஷான்)

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price