இறந்தவர்களை என்ன செய்வது? அமைச்சர் பந்துல குணவர்தன

அனைவருக்கும் ஒரே நாடு ஒரே நியதி என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கான தீர்மானங்களை மேற்கொள்கின்றார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தனிப்பட்ட ரீதியில் எவரேனும் முரண்பட்டால் அவர்கள் உலக சுகாதார அமைப்பின் சுகாதார பணிப்பாளர்களிடமிருந்து பிறப்பிக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்படவேண்டிய தேவை ஏற்படும்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களுக்கான இறுதி கிரியைகள் தொடர்பில் சில அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர் ஓருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதறக்கு பதிலளித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார பணிப்பாளர்களின் ஆலோசனைக்கு அமைய நியதி அல்லது சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயலாற்ற வேண்டும்.

அத்துடன், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும் என்பதோடு கௌரவமான மரணமும் சம்பவிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு