அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்பது வேடிக்கை

அரச உத்தியோகத்தர்களிடம் அரை மாத சம்பளத்தை தரும்படி அரசு கேட்பது வேடிக்கையாக உள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சõட்டினார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் பலகோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பாடும் அத்தகையவர்களைக் கண்டு கொள்ளாமல் அரச ஊழியர்களிடம் சம்பளத்தைக் கேட்பது வேடிக்கையானது எனவும் அவா“ கூறினார். ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் இடம் பெற்ற மோசடி வர்த்தகத்தில் சீனி இறக்குமதி மோசடி பாரியளவானது. சீனிக்கான இறக்குமதி வரியை நீக்கி மக்களுக்கு சலுகை வழங்குவதாக கூறிய அரசாங்கம் நிவாரணத்தை மக்களுக்கு வழங்காமல் தமக்கு இசைந்த வர்த்தகர்களுக்கு சீனி வர்த்தகத்தில் பாரிய இலாபத்தை பெறவைத்துள்ளது. இந்த வர்த்தகம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எவ்விதமான நிதியும் அற விடப்படப்படவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது கொரோனா நிவாரண நிதிக்காக அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தின் அரைவாசியை கேட்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போதைய கொரோனா சூழ்நிலையை உரிய பொறிமுறை இன்றி அரசு கையாள நினைத்தாலேயே நாடு தற்போது பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

சுகாதார தரப்பினர் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை செவிமடுக்காது காலத்தை கடத்திய ஆட்சியாளர்கள் தற்போது கண்டி மகா நாயக்கர்களின் கோரிக்கையை அடுத்து நாட்டை முடக்குவதற்கு முன்வந்தனர். பத்து நாட்கள் முடக்கத்தை அறிவித்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா வழங்கப்படும் என கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

10 நாட்களில் பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு 2000 ரூபாயை வழங்குவது ஒரு குடும்பத்துக்கு எத்தனை நாட்களுக்கு போதுமானது? என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

Read:  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்