கண்டி கதிர்காம தேவாலய பெரஹராவில் கலந்துகொண்ட 45 கலைஞர்களுக்கு கொரோனா தொற்று

கண்டி கதிக்காம தேவாலய பெரஹரா உற்சவத்தில் கலந்துகொண்டிருந்த 76 கலைஞர்களுள் 45 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்றுயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரஹரா முதல் உற்சவம் முடிவடைந்ததன் பிறகு, கடந்த 21ம் திகதி எழுமாறாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆன்டிஜென் பரிசோதனையில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ள அனைவரும் உற்சவ ஊர்வலத்தில் பங்கு கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

கண்டி தேசிய மருத்துவமனை மாற்றும் கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவு ஆகியன இணைந்து உற்சவத்தில் கலந்த கொண்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு தினசரி ஆன்டிஜென் சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.ஏ.அமீனுல்லா – தினகரன்

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price