அவுஸ்திரேலியா கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 24 மணிநேர இடைவெளியில், 818 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 42 பேர் பாதிக்கப்பட்டிருந்தபோது சமூகத்தில் நடமாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த மூத்தோர் மூவர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்டோரியா மாநிலத்தில் 71 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. சுமார் ஓராண்டு காணாத மிக அதிகமான தினசரி எண்ணிக்கை இதுவாகும். அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதிகரித்துவரும் நோய்த் தொற்றுச் சம்பவங்களைக் கையாள, அந்நாட்டுப் பொதுச் சுகாதார அமைப்பு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினகரன்