நாடோ முடக்கத்தில் மக்களோ வீதிகளில் – அசோக அபேசிங்க எம்.பி

நாடு முடக்கப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை .வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காணப்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தொழிற் சங்கம் நாட்டை மூடும்படி கேட்டுக் கொண்ட நேரத்தில் நாட்டை மூடவில்லை. இப்போது மூடியுள்ளனர். ஆனால் அது வெற்றியளிக்க வில்லை. தற்போது வீதிகளில் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் இருக்கின்றனர். இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்கள் எல்லாம் விலை அதிகரித்துள்ளன .மருந்து விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 60 வீதமான மருந்துகளுக்கு 30 வீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று வைத்தியசாலைகளில் மருந்துகள் 60 விகிதமான வகைகள் பற்றாக்குறை காணப்படுகிறது,

உலகில் மிகவும் பின்தங்கிய ஐந்து நாடுகளில் ஒன்றென இலங்கையும் வந்து விட்டது. வீழ்ச்சியடைந்து வரும் நாடுகளில் நான்காவது இடத்தில் இலங்கை உள்ளது. பங்களாதேஷ் நாட்டில் கடன் பெற்றுக் கொள்வதில் பிரதான இடத்தில் இலங்கை இருக்கிறது.

பி சி. ஆர். குறைவடைந்துள்ளது, பசில் வந்து எரிபொருள் விலை குறைக்கப்பட்டதா? கேஸ் விலை அதிக்கப்பட்டது. தற்போது மக்களுக்கு எல்லாம் மறந்து போய்விட்டது. அரசாங்க சேவையாளர்களுடைய சம்பளத்தில் அரைவாசியினைக் கேட்கின்றனர். எந்தளவுக்கு அநியாயம். நாட்டின் அரசாங்க தலைவரின் பொறுப்பு மக்களை வாழ வைப்பதே.

கடந்த காலத்தில் நாடு முற்றாக முடக்கப்பட்ட போது கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்பட்டது. தற்போது 2000 ரூபா வழங்கவுள்ளனர். மக்களது வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் அரைவாசி குறைக்கப்பட்டுள்ளது. இது வெட்கமற்ற வேலையல்லவா? 1998 என்ற இலக்கத்துடன் கதைத்தால் பொருள் பொதி கிடைக்கும் என்று கூறினார்கள். அதற்குப் பேசினால் பதிலில்லை என்றார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

தினக்குரல் 24-8-21