முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறக்கும்போது அவருக்கு வயது 65.

மங்கள சமரவீரவுக்கு கடந்த 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். -வீரகேசரி-