போலி செய்திகளை அடையாளம் காண்போம்.

உங்களுக்கு கிடைக்கின்ற எல்லா தகவல்களையும்‌ பகிராதீர்கள்‌. பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் பகிருங்கள். பகிர்வதற்கு முன்னர்‌ சிந்தியுங்கள்‌.

கிடைக்கப்‌பறும்‌ தகவல்‌ உத்தியோகபூர்வ தரப்புகளினால்‌ வெளியிடப்பட்டதா என்பதை அவதானியுங்கள்‌.

உலக சுகாதார நிறுவனம்‌, அரசாங்க தகவல்‌ திணைக்களம்‌, சுகாதார அமைச்சு, பொலிஸ்‌ திணைக்களம்‌ ஆகியவற்றின்‌ உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம்‌ பின்பற்றுங்கள்‌.

நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை, வாஎனாலி, தொலைக்காட்சி மற்றும்‌ இணையத்தள நிறுவனங்களின்‌ செய்தீகளை மாத்திரம்‌ பின்தொடருங்கள்‌.

தகவல்களை உறுதிப்படுத்த முடியாவிடின்‌, அவை பிரதான ஊடகங்களில்‌
வெளியாகியுள்ளதா என்று தேடுங்கள்‌. இன்றேல்‌ உங்களுக்கு தெரிந்த அதிகாரிகள்‌, ஊடகவியலாளர்களின்‌ உதவியை நாடுங்கள்‌.

கொவிட்‌-19 வைரஸ்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்ட நபர்களின்‌ பெயர்‌, புகைப்படம்‌, இனம்‌, மதம்‌, குடும்ப விபரங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள்‌.

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களால்‌ வெளியிடப்படும்‌ மருத்துவ ஆலோசனைகளை மாத்தீரம்‌ பின்பற்றுங்கள்‌. எந்த ஒரு மருத்துவ ஆலோசனைகளையும்‌ பகிராதீர்கள்‌.

கொவிட்‌-19 நெருக்கடி காலத்தில்‌ இனம்‌, மதம்‌, பிரதேசம்‌, அரசியல்‌ சார்ந்த கருத்துகள்‌ வெளியிடுவதை தவிர்த்துக்‌ கொள்ளுங்கள்‌.

போலிச்‌ செய்திகளை உருவாக்குதல்‌, பகிர்தல்‌ என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்‌. உங்களின்‌ சமூக ஊடக பதீவுகள்‌ அனைத்தும்‌ கண்காணிக்கப்படுகின்ற என்பதை நினைவில்‌ வைத்துக்கொள்ளுங்கள்‌.

Srilanka Muslim Media Forum

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters