நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை திடீரென சரிந்துள்ள நிலையில் இலங்கையில் விலையை குறைக்குமாறு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கடிதம் மூலம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 73.95 டொலராக இருந்துவந்த நிலையில், தற்போது 62.14 டொலராக சரிந்துள்ளதென அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-தமிழன்.lk-

Previous articleமேலும் 183 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 7,366 கொவிட் மரணங்கள்
Next articleஇன்றைய தங்க விலை (24-08-2021) செவ்வாய்க் கிழமை