பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் தனியார் சட்டத்தில் விரைவில் திருத்தம் -அலி சப்ரி

மிக விரைவாக முஸ்லிம்‌ விவாக மற்றும்‌ விவாகரத்துச்‌ சட்டம்‌ உரிய திருத்தங்களுடன்‌ நிறைவேற்றப்படவுள்ளது. இதில்‌ முஸ்லிம்‌ சமுகத்தின்‌ ஏற்புடன்‌ அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும்‌ ஏற்படாது நிறைவேற்‌றப்படும்‌ என நீதி அமைச்சரும்‌ ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்‌. அத்துடன்‌, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன்‌ தொடர்புபட்டுள்ள இறுதி குற்றவாளி வரை அனைவருக்கு எதிராகவும்‌ சட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌ என்றும்‌ அவர்‌ தெரிவித்தார்‌.

நீதி அமைச்சராக நியமனம்‌ பெற்றதன்‌ பின்னர்‌ அடுத்து முன்னெடுக்கவுள்ள தனது செயற்பாடுகள்‌ மற்றும்‌ தான்‌ கொண்டிருக்கும்‌ விசேட திட்டங்கள்‌ தொடர்பில்‌ கருத்து வெளியிடும்போதே அவர்‌ மேற்கண்டவாறு தெரிவித்தார்‌.

இதன்போது அவர்‌ மேலும்‌ தெரிவிக்கையில்‌,

19ஆவது திருத்தச்சட்டத்தில்‌ பல்வேறு குறைபாடுகள்‌ காணப்‌படுகின்றன. அவை அனைத்தும்‌ பொதுவெளியில்‌ கலந்துரையாடப்பட்டுள்ளன. 19ஆவது திருத்‌தச்சட்டம்‌ அவசரஅவசரமாக தனிப்பட்ட காரணங்களுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்‌திருத்தம்‌ காரணமாக அரசியலமைப்பு நடைமுறையில்‌ பல்வேறு நெருக்கடிகள்‌ காணப்படுகின்றன. இதனை சாதாரண பொதுமக்களும்‌ உணர்ந்துள்ளார்கள்‌. ஆகவே 19இல்‌ சர்ச்சைகளை உருவாக்குகின்றன அல்லது குழப்பகரமான விடயங்களை கொண்டிருக்கின்ற ஏற்பாடுகளில்‌ உடனடியான திருத்தங்கள்‌ அவசியமாகின்றன. அதுதொடர்பில்‌ வரைபுகள்‌ தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பவுள்ளன.

மேலும்‌ புதிய அரசியலமைப்பு பற்றி தோதல்‌ மேடைகளில்‌ பேசப்‌பட்டது. அதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர்‌, அமைச்சரவை முடிவுகளை எடுக்கின்ற பட்சத்தில்‌ அடுத்தகட்ட நடவடிக்கைகள்‌ முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன்‌, முஸ்லிம்‌ சமூகத்தினுள்‌ காணப்படும்‌ இளவயது திருமணங்களை தடைசெய்ய வேண்டியது மிகவும்‌ அவசியமாகின்றது. அதனை முஸ்லிம்‌ சமுகத்தினர்‌ பெரிதும்‌ விரும்புகின்றார்கள்‌. கடந்த காலத்தில்‌ முஸ்லிம்‌ பிரதிநிதிகளும்‌ அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்‌.

1951 ஆம்‌ ஆண்டின்‌ 13ஆம்‌ இலக்க முஸ்லிம்‌ விவாக மற்றும்‌ விவாகரத்துச்‌ சட்டத்தில்‌ திருத்தங்‌களை செய்வதற்காக முன்னாள்‌ நீதியரசர்‌ சலீம்‌ மர்சூப்‌ தலைமயிலான குழுவினர்‌ பல்வேறு விடயங்கள்‌ தொடர்பில்‌ ஆராய்ந்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளனர்‌. அதேபோன்று இந்தச்‌ சட்டத்தினை திருத்துவதற்கான வரைபும்‌ தயாரிக்‌கப்பட்டுள்ளது. ஆகவே மிக விரைவாக முஸ்லிம்‌ விவாக மற்றும்‌ விவாகரத்துச்‌ சட்டம்‌ உரிய திருத்தங்களுடன்‌ நிறைவேற்‌றப்படவுள்ளது. இதில்‌ முஸ்லிம்‌ சமுகத்தின்‌ ஏற்புடன்‌ அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும்‌ ஏற்படாது நிறைவேற்றப்படவுள்ளது.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

நான்‌ அறிந்தவரையில்‌ பயங்கரவாத தடைச்சட்டம்‌ சம்பந்தமாக இதுவரையில்‌ அரச தரப்பு சார்ந்து எவ்விதமான முன்மொழிவுகளும்‌ காணப்படவில்லை. எனினும்‌ அமைச்சரவை கூடியபின்னர்‌ அவ்‌விடயம்‌ தொடர்பில்‌ அவசியம்‌ ஏற்படும்‌ பட்சத்தில்‌ கவனம்‌ செலுத்‌தப்படும்‌ என்றார்‌. அத்துடன்‌, நீதி அமைச்சில்‌ நேற்று வியாழக்கிழமை கடமைகளைப்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டதன்‌ பின்‌னரும்‌ அவர்‌ கருத்து வெளியிட்டார்‌. இதன்போது, நாட்டில்‌ நீதித்துறை அமைச்சராக நான்‌ பதவியேற்றிருப்பது குறித்தவொரு சமூகத்தை மாத்திரம்‌ பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்ல. நாட்டுக்காகவே நாம்‌ நியமிக்கப்பட்டிருக்‌கின்றோம்‌. நாட்டுக்கு எதிராகவோ அல்லது நாட்டில்‌ நிலவுகின்ற அமைதிக்கு எதிராகவோ எம்மால்‌ எந்த தவறும்‌ இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

சிலர்‌ நாட்டில்‌ மக்களை பாகுபடுத்தி பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்‌. இந்து , கத்‌தோலிக்க , முஸ்லிம்‌ மற்றும்‌ பெளத்த மக்கள்‌ ஒன்றிணைய முன்வரும்‌ போது சிலர்‌ பணத்தை செலவிட்டு கூட அந்த ஒற்றுமையை சீர்குழைக்க முயற்சிக்கின்‌றனர்‌. சமூக வலைத்தளங்களில்‌ அநாவசியமான கருத்துக்கள்‌ முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்‌ சமூகத்திற்குள்‌ அடிப்படைவாதிகளை இல்லாதொழிப்பதற்கான தேவை வேறு யாருக்கும்‌ இல்லை. அதற்கான காரணம்‌ அந்த அடிப்படைவாதிகளும்‌ பயங்கரவாதிகளும்‌ இருக்கும்‌ வரையில்‌ எம்மால்‌ சுதந்திரமாக வாழ முடியாது. எனவே நாம்‌ முழுமையாக பாடுபடுவோம்‌.

எவரேனும்‌ உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன்‌ தொடர்‌புபட்டிருந்தால்‌ அதன்‌ இறுதி குற்றவாளிவரை சட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌ என்று உறுதியளிக்கின்றேன்‌ என்றார்‌.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Read:  மீண்டும் ரணில் !!
SOURCEவிடிவெள்ளி பத்திரிக்கை 16