கொரோனா அச்சுறுத்தல் – முக்கிய பட்டியலில் 7 நாடுகள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 180 நாடுகளில் பரவி உள்ளதாக ஜான்ஸ் ஹப்கின்ஸ் பலகலைகழகம் தெரிவித்துள்ளது.

முதலில், சீனாவின் வுஹான் நகரில் பரவ துவங்கிய வைரஸ் இன்று இத்தனை நாடுகளை முடக்கியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 850,000பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,000பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பாதிப்பின் விளைவாக உலக நாடுகளில் உள்ள பங்குசந்தை பெருமளவில் சரிவை சந்தித்து வருகின்றது.

ஜான்ஸ் ஹப்கின்ஸ்-ன் தகவல்படி ஏழு நாடுகளில் 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

அமெரிக்கா

முதல் கொரோனா தொற்று ஜனவரி 2ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது. அதன்பின் மார்ச் மாதத்தில்தான் அங்கு பாதிப்பு அதிகரிக்க துவங்கியது.

அமெரிக்காவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 190,000ஆகக் கொண்டுள்ளது. இதில் உண்மை என்ன என்பது உறுதிபட தெரிவிக்க இயலாது என்றும்,அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து தகவல் வெளியிடலாம் என்றும் ஹப்கின்ஸ் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு வாரங்கள் கொடூரமான நாட்களாக இருக்கும் என்றும். கிட்டத்தட்ட 100,000லிருந்து 240,000பேர் வரை நாம் இழக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தொடர்ந்து நாடுமுழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 30ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார சாம்ராஜியத்தை கொண்ட அமெரிக்கா, முன்னோடி இல்லாத திட்டங்களை தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற செய்தது.

இருப்பினும் பொருளாதார சிக்கலிலேயே உள்ளது. எனவே 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 6.2சதவீதமாக சுருங்ககூடும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளார்.

இத்தாலி

உலகத்தில், கொரோனாவால் அதிகம் இறப்புகளை சந்தித்த நாடு இத்தாலிதான். தொற்றுவிகிதத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இது உள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில்தான் ஜனவரி 31ஆம் திகதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அதன்பின் வடக்கு மாகாணமான Lombardy-ல் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

எனவே நாடு முழுவதும், மார்ச் 7ஆம் திகதி முடக்க அரசு உத்தரவிட்டது. இதில், 60மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த முடக்க நடவடிக்கையால் இத்தாலியின் பொருளாதாரம் உற்பத்தியில் 2 சதவீதம் சுருங்கும் என்று நிபூணர்கள் கணித்துள்ளனர்.

ஸ்பெயின்

அதிக இறப்புகள் கொண்ட பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த நாடு. பெப்ரவரி மாதத்தில் 45பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 90,000பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8,000பேர் உயிழந்துள்ளதாக ஹாப்கின்ஸ் தரவு தெரிவிக்கிறது

இதனால், அந்நாட்டு அரசு நாடுமுழுவதையும் முற்றிலும் முடக்கியது.

தொடர்ந்து வரி செலுத்துதல், சிறுதொழிலாளிகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்தல் ஆகியவற்றை முன்னுரிமை அளித்தது. மேலும், ஐரோப்பிய நாடுகளின் துணையை நாடியுள்ளது.

முன்னதாக மந்த நிலையில், இருந்த ஸ்பெயின் பொருளாதாரம் 2019ஆம் ஆண்டில்தான் 2சதவீதம் வளர்ச்சியை கண்டது. இந்நிலையில், தற்போது இத்தகைய நிலை இந்த ஆண்டு 6.6 சதவீதம் சரிவில் கொண்டு விடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சீனா

சீனாவின் வுஹான் நகரில்தான் கொரோனா வைரஸ் தொற்று முதலில், பதிவு செய்யப்பட்டதாக நம்பபடுகிறது. இது குறித்து பெப்ரவரி மாதத்தில்தான் உலக அளிவில் பெரிதும் பேசுப்பட்டது.

முன்னதாக சீனாவில், ஜனவரி மாதத்திலேயே பல நகரங்கள் முற்றிலும் முடக்கப்பட்டன. அங்கு பொதுபோக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் என்று அனைத்தும் நிறத்தி வைக்கப்பட்டிருந்தது.

வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் சீனாவில் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், எல்லைகளின் வழியாக புதிய நோய் தொற்று நுழையலாம் என்பதால், பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில், பொருளாதார வளர்ச்சி 5.4சதவீதத்தில் இருந்த நிலையில், 2.1ஆக குறைந்தது. தொடர்ந்து நாடு முடக்கப்பட்ட நிலையில், அது ஒரு சதவீதமாக மீண்டும் குறைந்தது

பொருளாதார நடவடிக்கைகளில் சீன அதிகாரிகள் பழைய முறைகளையே கையாண்டு வருகின்றனர்.

ஜேர்மனி

ஹாப்கின்ஸ் தரவுபடி மார்ச் மாதத்திற்கு முன் 100க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்புஎண்ணிக்கை, பின் வேகமாக அதிகரித்தது. தற்போது 70,000பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.

ஜேர்மனியின் Chancellor Angela Merkel பள்ளிகளை மூடவும், இரண்டுபேருக்கு மேல் கூடவும் தடைவிதித்து உத்தரவிட்டார்.

பிரான்ஸ்

ஜனவரி மாதம் இறுதியில் முதல் கொரோனா தொற்று பிரான்ஸ் நாட்டில் உறுதி செய்யப்பட்டது. பெப்ரவரியில் 50,000பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3,000பேர் பலியாகினர்.

மார்ச்17ஆம் திகதி பிரான்ஸ் நாட்டை மூடுவதாக அதிபர் இம்மானுவால் மேக்ரான் அறிவித்தார். இதன்படி ஏப்ரல் 15ஆம் திகதி வரை நாட்டில் யாரும் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசு சிறுதொழில்புரிவோருக்கு 45பில்லியன் ஈரோக்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், 300பில்லியன் ஈரோ வங்கி வழியாக கடன்களாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்கத்தால் நாட்டில் 1 சதவீதம் உற்பத்தி முடங்கும் என்று நிதியமைச்சர் புருனோ ஐ மைர் தெரிவித்துள்ளார்.

ஈரான்

ஈரானில், 44,000 பேருக்கு தற்போதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,800பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டது ஈரான்தான் என்று ஹாப்கின்ஸ் தரவு தெரிவிக்கின்றது.

இதை சமாளிக்க ஈரான் அரசு 85,000கைதிகளை தற்காலிகமாக விடுவித்தது. பள்ளி கல்லூரிகளை மூடியதுடன் நாட்டின் முக்கிய வழிபாட்டுதலங்களையும் அந்நாட்டு அரசு மூட உத்தரவிட்டது.

தொடர்ந்த அந்நாட்டில் வரி தொகை, மாதக்கட்டணங்கள் ஆகியவை செலுத்துவதை ஒத்திவைப்பதாக அதிபர் ஹசன் ரூஹானி மார்ச் 15அன்று அறிவித்தார்.

முதல் முறையாக ஈரான் அரசு அவசர கடனாக $5 கேட்டு விண்ணபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page