உயிரிழக்கும்‌ 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம்‌ தடுப்பூசி வழங்கவில்லை

நாட்டில்‌ கொவிட்‌ தொற்றினால்‌ உயிரிழக்கும்‌ 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்‌ பெருமளவானோர்‌ தடுப்பூசியைப்‌ பெற்றுக்‌ கொள்ளாதவர்கள்‌ என்று அரசாங்கம்‌ கூறுகிறது. இவர்கள்‌ தடுப்பூசியைப்‌ பெற்றுக்கொள்‌ளாமல்‌ இறக்கவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி வழங்‌கப்படவில்லை என்பதே உண்மையாகும்‌ என்று ஐக்‌கிய மக்கள்‌ சக்தியின்‌ பாராளுமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.எம்‌. மரிக்கார்‌ தெரிவித்தார்‌.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்‌ சந்திப்பில்‌ இதனைத்‌ தெரிவித்த அவர்‌ மேலும்‌ குறிப்பிடுகையில்‌.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்‌ தடுப்பூசி வழங்கும்‌ வேலைத்திட்டத்‌துக்கு முன்னுரிமையளித்துள்ளதாகத்‌ தெரிவித்துள்ளார்‌. தண்ணீர்‌ குடத்தை ஆற்றில்‌ எறிந்தபோதும்‌ தம்மிக பாணியை பிரசித்தப்படுத்தியபோதும்‌ மூடநம்பிக்கைகளின்‌ பின்னால்‌ செல்லாமல்‌ தடுப்பூசியை விரைவாக கொள்வனவு செய்யுமாறு நாம்‌ வலியுலுத்தினோம்‌. ஆனால்‌ அதனை கவனத்தில்‌ கொள்ளாமல்‌ அரசாங்கம்‌ எம்மை விமர்சித்தது.

இந்தியாவிடமிருந்து முதற்கட்டமாக தடுப்பூசியை கொள்வனவு செய்தபோதே மேலதிக தடுப்பூசிகளைப்

பெற்றிருந்தால்‌ சிக்கல்‌ ஏற்பட்டிருக்காது. தற்போது தடுப்‌பூசி வழங்கும்‌ பணிகள்‌ துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி கூறுகிறார்‌. ஆனால்‌ வினைத்திறனாக முன்னெடுக்கப்படுகிறதா? உலக நாடுகளில்‌ முதற்கட்ட தடுப்பூசி பெற்றுக்‌ கொண்டோர்‌ இரண்டாம்‌ கட்ட தடுப்‌ பூசி பெற்றுக்கொண்டோருக்கிடையில்‌ 10 இலட்சம்‌ என்ற வித்தியாசமே காணப்படுகிறது. ஆனால்‌ இலங்‌கையில்‌ அவ்வாறல்ல.

ஜனாதிபதி தனது உரையில்‌ 30 வயதுக்கு மேற்பட்டோகுக்கு தடுப்பூசி வழங்கும்‌ பணிகளுக்கு முன்னுரிமைய ளித்த முதல்‌ நாடு இலங்கை என்று குறிப்பிட்டார்‌. அந்த தீர்மானத்தின்‌ காரணமாகவே இன்று 60 வயதுக்கும்‌ மேற்‌பட்ட பலரும்‌ நாளாந்தம்‌ கொவிட்‌ தொற்றால்‌ இறந்து கொண்டிருக்கின்றனர்‌.

இவ்வாறு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்‌ உயிரிழப்பவர்கள்‌ தடுப்பூசியைப்‌ பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறமுடியாது. அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கப்‌பெறவில்லை. எனவே இவர்களின்‌ மரணத்திற்கு அரசாங்‌கமே பொறுப்புக்கூற வேண்டும்‌ என்றார்‌.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter