அரசாங்கத்துடன் SLMC இணைய முயலுவதானது தேசிய அரசியலில் முஸ்லீம் அரசியலை பலவீனப்படுத்தும்.

“தற்போதய ஆளும் அரசாங்கத்துடன் SLMC இணைந்து கொள்ள முயலுவதானது தேசிய அரசியலில் முஸ்லீம் அரசியலை மேலும் பலவீனப்படுத்தும்.”

சில நாட்களாக, சஜித் கூட்டணி மீது வெறும் தேசியப்பட்டியலை மாத்திரம் காரணம் காட்டி அமைத்துக் கொண்ட கூட்டணியை பலவீனப்படுத்தி தற்போது ஆளும் அரசாங்கத்துடன் இணைவதற்கான முயற்சியை சிறிலங்கா முஸ்லீம் காங்ரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிபெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடக செவ்விகள், நகர்வுகள் என்பன காட்டுகின்றன.

தேசியப்பட்டியல் என்பது முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினை கிடையாது

தற்போது அமையப்பெற்றுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது இந்த நாட்டில் *பலமான எதிர்கட்சியின்* தேவை அவசியமாக உள்ள நிலையில் எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் ஆளும் கட்சியுடன் இணைவதற்காக எடுத்த முயற்சியை, SLMC மீள்பரிசீலணை செய்யவும் வேண்டும்.

இந்த நாட்டின் முஸ்லீம்களுக்கான தாய்க்கட்சியாக பார்க்கப்படுகின்ற “நாமக் கட்சியாக” சிறிலங்கா முஸ்லீம் காங்ரஸ் இருக்கிறது என்பதால், SLMC யின் தீர்மானங்கள் இந்த நாட்டின் முஸ்லீம்களை பொறுப்புடன் வழிநடாத்துவதாக இருக்க வேண்டுமே தவிர மேலும் மேலும் சிக்கல்களுக்கு உள்ளாக்கக் கூடாது.

SJB ஐக்கிய மக்கள் சக்திக்கு, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மை சமூகத்திற்குள்ளும் வேரூன்றி பயனிக்க வேண்டிய நிலை இருப்பதால், இம்முறை SJB யின் *தேசியப்பட்டியலை சிறுபான்மைக்கட்சிகளுக்கு வழங்காமல் தீர்மானத்தை மாற்றியிருக்கக் கூடும்* என்பதால், இத் தேசியப்பட்டியல் விவகாரத்தை கட்சி சார்ந்த புறக்கணிப்பு என்று பார்க்காமல் மாறாக, தேசிய நலனை முன்னிலைப்படுத்தி முற்போக்குடன் செயற்பட வேண்டிய வலுவான அரசியல் காரணங்களையே இச் செயற்பாடுகளால் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

Read:  ரணிலிடமும் புதிய தீர்வுகள் இல்லை!

ஏனென்றால் எதிர்பார்த்த அளவு பாராளுமன்றத்திற்கு தேவையானவர்களும், புதியவர்களும் முஸ்லீம்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்டும் உள்ளனர். அதுவும் ஐக்கிய மக்கள் சக்திக்கூடாக (SJB) அதிகமான முஸ்லீம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதும்.. இதற்கு மேலதிகமாக *இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் போன்ற அவசியமான* முஸ்லீம் பிரதிநிதிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ள போதும், மேலும் மேலும் SLMC போன்ற முஸ்லீம் கட்சிகள் தேசியப்பட்டியல்களை கோருவதும், கிடைக்காத போது அரசாங்கத்துடன் இணைவதற்கு எத்தனிக்கின்ற இந்நிலைகளால் முஸ்லீம் அரசியலை பலவீனப்பட்டுத்துவதற்கான வாய்ப்புக்களே அதிகம் ஏற்படும்.

அதேபோன்று தற்போதுள்ள அரசாங்கத்தின் அத்துணை செயற்பாடுகளும் பெளத்த இனவாதத்தை அடிப்படையாக கொண்டே திட்டமிடப்படுகின்றன. அதாவது,

1. அனுராதபுர ருவன்வெளிசாயவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதிவியேற்பு நிகழ்வு.

2. தளதா மாளிகையில் அமைச்சரவை சத்தியப் பிரமாண நகழ்வு.

3. சிறுபான்மையினரின் நிறங்களை நீக்கி பறக்க விடப்பட்ட தேசிய கொடி.

என்று பலவிடயங்களை கூறலாம்.. இதற்கு அடிப்படையாக அமைந்தது 2015 ல் நாட்டில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றத்தினால் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காமல் அவர் தோல்வி கண்டதாகும். இதனை கவனத்தில் கொண்டு பெளத்த இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் வெற்றிபெற்றும் இருந்தார்கள். இதற்கு மேலதிகமாக ஏப்ரல் -21 தாக்குதலும் இவர்களுக்கு சாதகமாக வழிகோலியது என்றால் மிகையாகாது.

இதன்பிறகு ஏற்பட்ட மைத்திரி – ரணில் முரண்பாடுகளை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது மாத்திரமின்றி UNP கட்சி என்ற நாமம் இல்லாத அளவிற்கு வெள்ளையடித்தும் தங்களது ஆட்சியை மீண்டும் நிறுவியுள்ளனர். 

Read:  மீண்டும் ரணில் !!

என்றாலும், தற்போது அமையப்பெற்றுள்ள அமைச்சரவையால் SLPP கூட்டணிக்குள்ளும் உட்கட்சி உட்பூசல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளே நிலவுகின்றன. காரணங்களாக,

1. தங்களது குடும்பத்தார்களுக்கு முக்கியமான அமைச்சுக்களை எல்லாம் வழங்கியது.

2. அவர்களது பங்காளி கட்சிகளின் பெரும்பாலானவர்களுக்கு இராஜாங்க அமைச்சுக்களேயே வழங்கியது.

3. முக்கியமானவர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படாமை.

இதனால் சிலவேளை பங்காளி கட்சிகளிலுள்ள பலர் எதிர்கட்சியில் அமரலாம் என்ற நிலையைக் கருத்திற்கொண்டு,  இன்னும் பல கட்சிகள் (சிறுபான்மைக்கட்சிகள் கூட) எம்மோடு இணையலாம் என்று SLPP எதிர்பார்க்கிறது. இதனை மையமாகக் கொண்டு SLMC யானது *வழமையான தனது பதவிமோக அரசியலை* அரங்கேற்றி இந்த நாட்டின் முஸ்லீம் அரசியலை மேலும் பலவீனப்படுத்தி  கேள்விக்குறியாக்க முயலுகிறது.

இதனால் SLMC யானது தாங்கள் அரசாங்கத்துடன் இணைவதற்காக எடுக்கின்ற முயற்சிகளில் மீள்பரிசீலனைகளை கொண்டு வரவேண்டும்.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEM.L.M சுஹைல் - MadawalaEnews