கொவிட் தொற்றாளர்களை இனங்காண்பதற்கு பயன்படுத்தப்படும் ‘அன்டிஜன்’ பரிசோதனை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 80 ரூபா மாத்திரமே செலவாகுகின்றபோதிலும், இந்த பரிசோதனை உபகரணங்கள் பொது மக்களுக்கு 2500 ரூபாவுக்கு விற்கப்படுவது குறித்து கவனத்தில் கொள்ளும்படி இலங்கை ராமாஞ்ஞ பெளத்த மத பீடத்தின் பிரதான தேரர் கலாநிதி ஓமல்பே தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
10 பிரிவுகளைக் கொண்ட ‘என்டிஜன்’ பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு தருவிப்பதற்கு 4 டொலர் செலவாகும். இது இலங்கை ரூபா மதிப்பில் 800 ஆகும்.
இந்த உபகரணத்தில் 10 பிரிவுகள் உள்ளன. அப்படியானால், ஒரு என்டிஜன் உபகரணப் பிரிவுக்கு 80 ரூபா மாத்திரமே செலவாகுமென தேரர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி,கொவிட் பரிசோதனை செய்யபவரிடம் 2400 ரூபா வரையிலான பணத்தை அதிகமாக அறவிடப்படுவது காணமுடிகிறது.
ஆகவே, இதனை யார் செய்கிறார்கள் என்பதை தேடிப் பார்க்கும்படியும், அதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்கும்படியும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அன்டிஜன் உபகரணங்களை இந்திய பண மதிப்பில் 150 ரூபாவுக்கு (450 இலங்கை ரூபா) இணைத்தளத்தின் ஒன்லைன் ஊடாகவோ அல்லது மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான நிலையில், இந்த என்டிஜன் பரிசோதனை உபகரணரங்களை இலங்கை மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் ஊடாக பொது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்தக் கடிததத்ல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.எம்.சில்வெஸ்டர் -வீரகேசரி-