அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதை அடிப்படைவாதிகளாலே பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளது : நாமல்

மொஹமட் அலி சப்றி, ஜனாதிபதியின் வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி என்பதற்காக அவருக்கு புதிய நீதிமைச்சருக்கான பதவி வழங்கப்படவில்லை என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலி சப்றி சட்டத்தரணியாக பல வழக்குகளில் ஆஜராகி இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிக்குமார் மற்றும் படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அலி சப்றி அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

அடிப்படைவாதிகளுக்கே அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பொறுத்துக்கொள்ள முடியாததாக இருப்பதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியும் தற்போதைய நீதியமைச்சருமான அலி சப்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?