தேங்கிக்கிடக்கும் 15 இலட்சம் Kg மரக்கறிகள்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேலியகொடை-மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்றி பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 15 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் அங்கு தேங்கிக் கிடப்பதாக அவர் குறிப்பிட்டார். -தமிழன்.lk-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price