விசேட அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்பட மாட்டாது

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது கடமைகளுக்கு செல்லும் போது விசேட அனுமதிப் பத்திரம் எதுவும் விநியோகிக்கப்படாதென இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது கடமைகளுக்கு செல்லும் போது விசேட அனுமதிப் பத்திரம் எதுவும் விநியோகிக்கப்படாதென இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

எனினும், தமது பணிகளுக்கு செல்வதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சோதனை சாவடிகளில் காண்பித்து, பணிக்கு செல்ல முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் பொருந்தும் என இராணுவ தளபதி கூறுகின்றார். – தினகரன்

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price