195 பேர் கொரோனாவுக்கு பலி : 151 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர்

நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர தன்மை சடுதியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேல் மாகாணத்தில் டெல்டா தொற்றின் பரவலும் சடுதியாக அதிகரிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இது டெல்டா வைரஸின் ஆரம்பகட்டம் மாத்திரமே என்றும் , அதன் முழுப்பரவலின் சக்தியை 5 வாரங்களின் பின்னரே முழுமையாக உணர முடியும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

நாளுக்கு நாள் படிப்படியாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினமும் 195 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 30 வயதிற்குட்பட்ட ஒரு ஆணும், 30 வயது முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்களில் 25 ஆண்களும் 18 பெண்களுமாக 43 பேரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 72 ஆண்களும் 79 பெண்களுமாக 154 பேருமாக மொத்தம் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,985 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்றையதினம் 3835 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 381 812 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 320 810 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 54 212 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். -வீரகேசரி-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page