நடுத்தர வயது பெண்களை அதிகம் பாதிக்கும் மூட்டு நோய்களும் நிவாரணமும்!

தற்காலத்தில் மனிதர் தகளுக்கு தொற்று நோய்களை விட தொற்றா நோய்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவைகளுள் மூட்டு நோய்களுக்கு பிரதான இடம் உண்டு என்பதை மறந்து விடமுடியாது.

பொதுவாக மூட்டு நோய்கள் (Arthritis) ஆயுர் வேதத்தில் வாதரோகங்களின் வகைகளில் ஒரு பிரிவாகக் கூறப்பட்டுள்ளது. இது வாத தோஷமானது உடலில் அதிகரிக்கும் வகையில் நாம் எமது உணவு, வாழ்கை நடைமுறை என்பவற்றை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் எமக்கு ஏற்படுகிறது.

பொதுவாக நடுத்தர வயது பெண்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பொதுக் காரணிகளாக நோக்கும் போது வயது அதிகரிக்கும் போது உடலில் காணப்படும் அக்கினியில் தளம்பல் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமான உடலின் சுரப்புகளில் மாற்றம் ( Hormone Changes) ஏற்படுகிறது. இந்நிலையில் உடலின் சமிபாடு குறைவடைவதன் காரணமாக உணவானது சரியான முறையில் சமிபாடடையாது பகுதி சமிபாடடைந்து உடலில்

காணப்படுகிறது. போதிய உடற்பயிற்சி இன்மை மற்றும் உறக்கம் இன்மை போன்ற காரணிகளும் இந்நோயைக் கூட்டுகின்றன.

இவ்வாறான நிலை ஏற்படாது தவிர்பதற்கு மருந்துகளை விட எமது உணவு மற்றும் வாழ்கை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகச்சிறந்தது. தற்போதைய பெண்களில் பலரும் ளவீடுகளில் சமைப்பதை விட கடைகளில் துரித உணவுகளை உண்பதையே கூடுதலாக காண்கிறோம்.

இதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சமைத்து

உண்ணுவது சிறந்தது. மேலும் இலகுவில் செரிமானம் அடையக்கூடிய கஞ்சி வகைகள் சிறந்த பலனைத் தருவதுடன் உடல் பருமனையும் பேண உதவும் உணவில் வெள்ளைப் பூடு இஞ்சி போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிழங்கு வகைகள் இறைச்சி, முட்டை, தயிர், இனிப்புப்பண்டங்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது சிறந்த பலனைத்தரும்.

மூச்சுப் பயிற்சி யோகாசனம் நடைப்பயிற்சி மருத்துவ ஆலோசனையுடனான உடற்பயிற்சி போன்றவையும் சிறந்த பலனைத்தரும். அத்துடன் இரவு உணவை 7-8 மணியுள் உண்டு 10 மணிக்கு முன் நித்திரைக்குச் சென்று அதிகாலையி எழுதலையும் கடைப்பிடிப்பதன் மூலம் தளம்பல் அல்லது மந்த நிலையில் உள்ள அக்கினியை சரி செய்வதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம்.

இதனைத் தவிர நோயின் நிலையிற்கேற்ப வைத்திய ஆலோசனையைப் பெற்று உள் மருந்துகளுடன் எண்ணெய் வகைகள் பத்து வகைகள் எனபவற்றுடன் பஞ்சகர்ம சிகிச்சை முறை மூலமும் சிறந்த பலனைப் பெறலாம்.

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page