மத்ரஸா விடுதிகளில் சிகிச்சை நிலையங்கள்? ஆராய்கிறது வக்ப் சபை

நாட்டில்‌ முஸ்லிம்‌ சமூகத்தின்‌ மத்தியில்‌ கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்றும்‌, தொற்றுக்‌ காரணமாக மரண வீதமும்‌ தொடர்ந்து அதிகரித்து வரும்‌ நிலையில்‌ நாடளாவிய ரீதியில்‌ அடிப்படைவசதிகளுடன்‌ கூடிய மத்ரஸா கல்லூரி விடுதிகளை கொவிட்‌ 19 சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவது தொடர்பில்‌ வக்பு சபை ஆலோசித்து வருகிறது என வக்பு சபையின்‌ தலைவர்‌ சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன்‌ “விடிவெள்ளி’க்குத்‌ தெரிவித்தார்‌. இது தொடர்பான மத்ரஸாக்களின்‌ விபரங்கள்‌ முஸ்லிம்‌ சமய பண்பாட்டலுவல்கள்‌ திணைக்களத்தின்‌ ஊடாக பெறப்பட்டு வருவதாகவும்‌ அவர்‌ கூறினார்‌.

அடிப்படை வசதிகளுடன்‌ கூடிய மத்ரஸா விடுதிகளில்‌ கட்டில்கள்‌, கழிப்பறை வசதிகள்‌ மற்றும்‌ போதியளவு இட வசதி இருப்‌பதால்‌ அவற்றை கொவிட்‌ 19 சிகிச்சை நிலையமாக மாற்றுவதில்‌ சிரமங்கள்‌ ஏற்படாது என்றும்‌ அவர்‌ கூறினார்‌.

தொடாந்தும்‌ அவர்‌ இது தொடர்பில்‌ தெரிவிக்கையில்‌, ‘நாட்டில்‌ கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்றினால்‌ முஸ்லிம்‌ சமூகத்தைச்‌ சேர்ந்தோரே அதிகளவில்‌ பாதிக்‌கப்பட்டுள்ளார்கள்‌. மரண வீதமும்‌ அதிகரித்துள்ளது. நாட்டில்‌ வைரஸ்‌ தொற்று நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்‌தியசாலைகளில்‌ போதிய இடமுமில்லை. இதனால்‌ நாளாந்தம்‌ அநேகர்‌ வீடுகளில்‌ மரணிக்கிறார்கள்‌. இந்நிலையினை கருத்திற்‌ கொண்டே வக்பு சபை மத்ரஸா விடுதிகளை கொவிட்‌ 19 சிகிச்சை நிலையமாக பயன்படுத்துவதற்கு ஆலோசித்து வருகிறது.

தற்போது மத்ரஸாக்கள்‌ மூடப்பட்‌டுள்ளதால்‌ இதனால்‌ சிரமங்கள்‌ எதுவும்‌ ஏற்படப்போவதில்லை. அத்தோடு ஒரு சில பள்ளிவாசல்களிலும்‌ கொவிட்‌ 19 சிகிச்சை நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்‌ அறிய முடிகிறது.

பள்ளிவாசல்‌ நிர்வாகங்கள்‌ வக்பு சபையின்‌ அனுமதியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்‌. நிர்வாகிகள்‌ தன்‌னிச்சையாக தீர்மானம்‌ எடுக்க முடியாது. அத்தோடு இதற்காக நிதி சேகரிப்பதிலும்‌ ஈடுபட முடியாது. வக்பு சட்டத்தின்‌ கீழ்‌ பள்ளிவாசல்கள்‌ நினைத்தவாறு நிதி சேகரிப்பில்‌ ஈடுபட முடியாது. முதலில்‌ வக்பு சபையின்‌ அனுமதி பெற்றுக்‌ கொள்ளப்பட வேண்டும்‌. அதற்கான வழிமுறை பின்‌பற்றப்பட வேண்டும்‌.

பாதுகாப்பு அமைச்சும்‌ உளவுப்‌ பிரிவும்‌ முஸ்லிம்‌ சமூகம்‌ செலவிடும்‌ நிதி தொடர்பில்‌ உன்னிப்பாக கவனம்‌ செலுத்தி வருகிறது என்பதை நாம்‌ மறந்துவிடக்‌ கூடாது.

Read:  20 வகை அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதி 3998 ரூபாவிற்கு !

கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்றினை இல்‌லாமற்‌ செய்வதில்‌ முஸ்லிம்‌ சமூகம்‌ அதிகூடிய கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்றார்‌.

இதேவேளை ‘கொவிட்‌ 19 தொற்று நோயினால்‌ பாதிக்கப்படும்‌ நோயாளாகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல்‌ நிர்வாகம்‌ பள்ளிவாசல்‌ வளாகத்தில்‌ கொவிட்‌ 19 சிகிச்சை மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு திட்ட மிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின்‌ வேறு சில மாவட்டங்களிலுள்ள பெரிய ஜும்‌ஆப்‌ பள்ளிவாசல்களிலும்‌ இவ்வாறான கொவிட்‌ 19 சிகிச்சை மத்திய நிலையங்களை ஆரம்பிப்பது தொடாபில்‌ விரிவான கலந்துரையாடல்கள்‌ இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.ஆர்‌.ஏ.பரீல்‌) – விடிவெள்ளி