இன்று மேலும் 21 நகரங்களின் கடைகளுக்கு பூட்டு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று (19) மேலும் 21 நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு, அந்தந்த நகர வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த நகரங்களில் மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் 58 நகரங்களில் உள்ள கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் மொத்தமாக அதன் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.அதன்படி,

வாரக்காபொல
வாரியபொல
துனகஹ
குளியாபிட்டிய
கம்புருபிட்டிய
உருபொக்க
பாதுக
எஹெலியகொட
மெதகம
ஹன்ஹமுனுவ
கிளிநொச்சி
திஸ்ஸமஹாரரம
வீரவில
பன்னேகமுவ
யோதகண்டிய
தெல்கொட
ஹிக்கடுவ
ஹபராதுவ,
படல்கும்புர,
காலி உடுகம, 
ஹசலக ஆகிய நகரங்களின் கடைகளே, இன்று (19) முதல் மூடப்பட்டன. -தமிழ் மிற்றோர்

Previous articleவர்த்தகர்கள் தாமாக முன்வந்து வியாபார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை
Next articleபாணின் விலையை வேறுவழியின்றியே அதிகரிக்கின்றோம் – பேக்கரி உரிமையாளர் சங்கம்