கொவிட் தொற்றால் மேலும் 186 உயிரிழப்புகள் -ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள்

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 186 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளாக இன்றைய தினம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

இதனால் நாட்டின் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,790 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (18) 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

30 வயதுக்கு கீழ் 04 மரணங்களும், 30 – 59 வயது வரையில் 35 மரணங்களும், 60 வயதுக்கு மேல் 147 மரணங்களும் நேற்று பதிவாகியுள்ளன. 111 ஆண்களும், 75 பெண்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

-வீரகேசரி-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price