மக்களுக்கு ரூ. 1,998 பெறுமதியான நிவாரணப் பொதி

நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு, 2,600 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த பொதியில், 20 வகையான அத்தியாவசிய பொருள்கள் உள்ளடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

வர்த்தக அமைச்சில்  இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவர் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்ண அவர், இந்தப் பொதியின் பெறுமதி 1,998 ரூபாயாகும் என்றார்.

1998 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த நிவாரணப் பொதியை மக்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறினார்.

நாடளாவிய ரீதியாக அனைத்து சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக குறித்த நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர்   மேலும் தெரிவித்தார் -தமிழ் மிற்றோர்-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price