தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு – கால அவகாசம் நிறைவு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய அரசியல் கட்சிகள் தத்தமது தேசியப் பட்டியல்களுக்காக உறுப்பினர்களை பிரேரிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ​நேற்றுடன் (14) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்களை சமர்ப்பித்துள்ளன.

இதேவேளை, இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சி தமக்குரிய உறுப்பினரை பிரேரிக்கவில்லை. அபே ஜனபல என்ற கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவது தொடர்பில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை தேர்வு செய்வதில் எழுந்துள்ள சிக்கல் குறித்து சட்டமா அதிபரால் அறிவுறுத்தல் ஒன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அபே ஜன பல கட்சி 67,758 வாக்குகளை பெற்று 1 போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

அதுபோல, ஐக்கிய தேசிய கட்சியும் 249,435 வாக்குகளை பெற்று 1 போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page