இலங்கையில் கொரோனா நம்மை கட்டுப்படுத்தும் நிலைமை வருமோ?

இந்த குறிப்பை எழுதும் போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142.

இந்த எண்ணிக்கையில் இன்று மாத்திரம் 20 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவே இதுவரை நாளாந்தம் பதிவாகிய எண்ணிக்கையில் அதிகமானதாகும்.

கடந்த 11 ம் திகதி முதல் ஏற்பட்டு வரும் தொற்று மற்றும் சந்தேகத்திற்கிடமான நோயாளர்களின் எண்ணிக்கையினை மையமாக வைத்து நடாத்தப்பட்ட ஆய்வில் மார்ச் 30 ம் திகதி இலங்கை 145 தொற்றாளர்களை கொண்டிருக்குமென எதிர்வு கூறப்பட்டது.
அது ஓரளவு சரியாகவே வந்திருக்கிறது.

ஏற்கனவே இது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்றியிருந்த அல்லது அவர்களோடு பழகியவர்களுக்கான தொற்றாக இருந்த நிலையினை ஆரம்ப நிலையாக கொண்டிருந்தோம் ( Tier 01).

இப்போது இது சமூகமட்டத்தில் பரவும் அபாயத்தை தொட்டிருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

Community spread என்று அறியப்படும் இந்த tier 2 நிலையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. A மற்றும் B Categories.

நாம் இப்போது Community spread (tier 2) இல் முதலாம் கட்டமான A இற்குள் மெதுவாக நுழைந்திருக்கிறோம்!

B இற்குள் சென்றுவிட்டால் நாம் பேணிவந்த J graph flattening எல்லாம் தலை கீழாகி எசகு பிசகாகிவிடும்!

பிறகு கொரோனாவை நாம் கட்டுப்படுத்த முடியாது கொரோனாவே நம்மை கட்டுப்படுத்தும்.

டொனால்ட் ட்ரம்ப் சொல்வதை போல இதனால் இறப்பவர்கள் தொகை நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்றாகிவிடும்.

கொரோனா நெருப்பை போன்றது.

தெரிந்து கொண்டே விரலை விட்டால் நெருப்பு சுடுவதை போல….

இந்த வைரஸை தேடிச்சென்றால் உங்களை அது ஆட்கொண்டு அழித்துவிடும்.
வெறும் தடிமல் காய்ச்சல்தானாமே.. இளந்தாரிகளை பெரிதாக பாதிக்காதாம்…
வயசாளிகளும், நோயாளிகளுந்தான் இதனால் இறந்து போகிறார்களாம் என்ற மெத்தனப்போக்கில் பலர் திரிகின்றார்கள்.

உங்களுடை உடலின் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி போன்ற காரணங்களால் வைரஸ் உங்களை சிலவேளை பாதிக்காமல் உங்களின் மீது ஏறிக்கொண்டு உங்களது வீடுகளுக்குள் நுழைந்து விடக்கூடும்.

அதனால் அன்புக்குரியவர்களை நீங்கள் இழந்துவிடக்கூடும்.

இந்த அனர்த்த அபாய நிலமைகளிலாவது கொஞ்சம் புத்தியோடு செயற்பட கற்றுக்கொள்வோம்.

கொரோனாவிற்கு இதுவரை மருந்து கிடையாது.

அறிகுறி தென்பட்டால் ஆஸ்பத்திரியில் அள்ளிக்கொண்டு போய் போடுவார்கள்,

அதிஷ்டமுள்ளவர் பிழைப்பார்.
இல்லாவிட்டால் இறக்க நேரிடும்.
நமது பிரேதத்தை உறவுகள் கூட பார்க்க முடியாமல் போகும்.

நமது உடல் எரிக்கப்படும் போது வீட்டில் உள்ள உறவுகளை காவலில் வைத்திருப்பார்கள்!

இன்றைய தேதியில் இதுதான் யதார்த்தம்!

Mujeeb Ibrahim

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters