நாட்டை முற்றாக முடக்கினால் 5000 ரூபா கொடுப்பது யார்?

நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி கொரோனாவை திட்டமிட்டு பரப்பியவர்கள்தான் இப்போது நாட்டை முடக்குமாறு கோருகின்றனர். நாட்டை முடக்குவது இலகு. பொருளாதார ரீதியாக மக்களுக்கு பதிலளிப்பது யார்?

ஒவ்வொரு முறையும் முடக்கி விட்டு 5000 ரூபா கொடுக்கும் நிலையிலா நாட்டின் பொருளாதாரம் உள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்ட மூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டை முடக்க வேண்டுமென சிலர் கூ றுகின்றனர் . அதனை நாமும் ஏற்கின்றோம். நாட்டை முடக்கினால் நாளாந்தம் உழைத்து உண்ணும் மக்களின் நிலை என்ன? பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பதில் சொல்வது யார் ?நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி கொரோனாவை திட்டமிட்டு பரப்பியவர்கள்தான் இப்போது நாட்டை முடக்குமாறு கோருகின்றனர்.இவர்களால் கொரோனா வேண்டுமென்றே பரப்பட்டுள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

கொரோனா தொற்று மற்றும் மரணம் தொடர்பான தகவல்களை அரசு மறைக்க முயற்சிக்கவில்லை. சுகாதார ஊழியர்கள் தரப்பில் ஏற்படும் சில தவறுகளினாலேயே தரவுகளில் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. அத்துடன் பெயர் விபரங்களுடன் கிடைக்கும் எண்ணிக்கைகளை மட்டுமே சுகாதாரத்துறை தரவுகளில் இணைத்துக்கொள்ளும்.

இராணுவத்தினர் ,புலனாய்வுத்துறையினர் தரவுகளை மாற்றுவதாக கூறுகின்றனர். பாதிக்கப்பட்டோர், மரணமானோர் பற்றிய சரியான தகவல்களை புலனாய்வுத்துறையினர் வீடு வீடாக சென்று உறுதிப்படுத்துகின்றனர் . எனவே அவர்களை குற்றம்சாட்ட வேண்டாம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கூறுகின்றனர். அரசு இப்போதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10,000 ரூபா நிவாரண உதவியை வழங்குகின்றது.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?

சுற்றுலா பயணிகளினால் கொரோனா பரவியதாக கூறுகின்றனர். 2020 ஆம் ஆண்டு இலங் கைவந்த சுற்றுலாப் பயணிகளில் 221 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்தது. அவர்களையும் நாம் தனிமைப்படுத்தினோம். எனவே எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது என்றார்

பா. கிருபாகμன் , ந. ஜெயகாந்தன் –