புத்தர் சிலை உடைப்பு தகவல் வழங்கிய தஸ்லீமுக்கு ரூ. 25 இலட்சம்

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் தகவல் வழங்கியமை காரணமாக, பயங்கரவாதிகளின் மிலேச்ச துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உடல் ஊனமுற்ற மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லீமுக்கு ரூபா 25 இலட்சம் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட குறித்த பரிசுத் தொகையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர வழங்கி வைத்தார்.

வவுணதீவு தாக்குதலுடன் தொடர்பு; காத்தான்குடியில் இருவர் கைது

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். – தினகரன்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page