டெல்டா வகையுடன் மோதி வெற்றிகாணும் சாத்தியமில்லை பிரிட்டிஷ் தடுப்பூசி நிபுணர் எச்சரிக்கிறார்

பெருமளவானோர் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தாலும் டெல்டா வகையுடன் மோதி வெற்றிகாணும் சாத்தியமில்லை பிரிட்டிஷ் தடுப்பூசி நிபுணர் எச்சரிக்கிறார்

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்தேச மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் தொடர்பாக தனது சந்தேகத்தை பேராசிரியர் அன்ட்ரூ பொல் லார்ட் வெளிப்படுத்தியதுடன் “”பீதியடைய” எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் Herd Immunity பெறுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை கோவிட் 19 இன் அதிகளவுக்கு பரவக்கூடிய டெல்டா உருத்திரிபு கடினமாக்கியுள்ளது என்று பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிட் 19 தடுப்பூசியின் பின்னணியில் உள்ள குழுவை வழிநடத்திய பேராசிரியர் அன்ட்ரூ பொல்லார்ட், இந்த வார முற்பகுதியில் அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவிடம் (ஏபிபிஜி) கொரோனா வைரசின் மற்றொரு அதிகளவுக்கு பரவக்கூடிய உருத்திரிபு குறித்த அச்சம் சாத்தியமானது என்றும் அதனால் கொடிய வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்கு எதுவும் இல்லை என்றும் கூறியி ருக்கிறார்.

எவ்வாறாயினும்,பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட தடுப்பூசிகளின் மூன்றாம் பூஸ்டர் டோஸ் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், “பீதிக்கு” எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் .

“இந்த வைரஸுடனான பிரச்சனையானது இது அம்மை அல்ல என்பதாகும். 957 பேருக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அந்த வைரஸ் மக்களிடையே பரவாது, என்று பேராசிரியர் பொல்லார்ட் இணைய வழியிலான சான்று பகிரும் அமர்வின் போது விளக்கியதாக இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட மக்களை டெல்டா உருத்திரிபு இப்போதும் பாதிக்கும். ஒரு கட்டத்தில் தடுப்பூசி போட்டிராத எவரும் வைரஸை சந்திப்பார்கள் என்று அர்த்தம். பரவுவதைத் தடுப்பதற்கான எதுவும் எங்களிடம் இல்லை, எனவே பெருமளவானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தொற்றமாட்டாது என்பதற்கு சாத்தியமில்லாத சூழ் நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்,

மேலும் வைரசானது தடுப்பூசி போடப்பட்ட ஆட்களுக்கு தொற்றும் போது இன்னும் சிறப்பான ஒரு புதிய உருத்திரிபை உருவாக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்,என்றும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரும், தொற்று நோய்களுக்கான நிபுணருமான போல் ஹன்டர் இக்கருத்தை எதிரொலித்திருக்கிறார்.

தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான கோவிட் 19 மற்றும் மரணத்தை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை முன்னிறுத்தியதுடன், ஆயினும் அவர்களால் தொற்றுநோயை முழுமையாக தடுக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார். .

“பெருமளவான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பது என்ற கருத்தீடு வெற்றிகொள்ளமுடியாதது.

ஏனெனில் தடுப்பூசி போடப்படாத மக்களில் தொற்று பரவும் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் சமீபத்திய தகவல்கள் இரண்டு டோஸ்கள் தொற்றுநோயிலிருந்து 507 மட்டுமே பாதுகாக்கின்றன என்று கூறுகிறது” என்று ஹன் டர் கூறினார்.

இதேவேளை ,அடுத்த மாதம் முதல் ஒரு காய்ச்சல் தடுப்பூசியுடன் கோவிட் 19 தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் வழங்கும் ,பிரிட்டனின் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்தின் திட்டங்களை நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர்.

“தடுப்பூசி போடப்பட்டவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் அதிகரிப்பு அல்லது அடுத்த கட்டமாக இறக்கும் மக்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டால் நாம் பூஸ்டரை அதிகரிக்க வேண்டிய நேரம். அது தற்போது நாம் காணும் ஒன்றல்ல” என்று பேராசிரியர் பொல்லார்ட் கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறையத் தொடங்கினாலும், நமது நோயெதிர்ப்பு முறைமை தடுப்பூசி போடப்பட்டதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறது, அந்த இரண்டு டோஸ் தடுப்பூசியும் எம்மிடம் உள்ளது என்பதை நினைவில் கொள்வோம். எனவே இந்த நேரத்தில் பீதியடைய எந்த காரணமும் இல்லை, என்றும் உலகின் தடுப்பூசி போடப்படாத பகுதிகளுக்கு செல்ல டோஸ் தேவைப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

(தினக்குரல் 15-8-21)