ஸ்ரீ தலதா மாளிகாவை வளவில் நின்ற பஸ்நாயக்க நிலமேயின் வாகனத்திற்கு சேதம் விளைவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகாவை வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்நாயக்க நிலமே ஒருவரது வாகனத்திற்கு சேதம் விளைவிக்கப்படுள்ளது.

கண்டி ஸ்ரீதலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் வருடாந்த எசல பெரஹரா தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தலதா மாளிகை வளவினுள் அமைந்துள்ள நாக்த தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேற்படி நாக்த தேவாயத்தின் பஸ்நாயக்க நிலமேயின் வாகனமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

இது பற்றிப் பொலிஸார் தெரிவிக்கையில், பெரும்பாலும் இது அசீட் திரவ வீச்சாக இருக்கலாம் .வாகனத்திற்கு பலத்த சேதம் இல்லாத போதும் அதி உயர் பாதுகாப்புப பிரதேசத்தில் தற்போது பாதுகாப்புப்படையினர் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது என்று கூறினர்.

ஸ்ரீ தலதா மாளிகையின் முக்கிய கடவை ஒன்றான ‘வாகல்கட’ என்ற இடத்திற்கு சமீபமாகவே இந்த சமபவம் நடந்துள்ளது. மேலும் சகலரும் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டே உள் அனுமதிக்கப்படுவதுடன் அனுமதியில்லாது வெளியார் உட் செல்ல முடியாத இடமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (வத்துகாமம் நிருபர் – தினக்குரல் 16-8-21)

Read:  பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?