பால்மா, சமையல் எரிவாயு தட்டுப்பாடு அடுத்த வாரமளவில் வழமைக்கு திரும்பும்

பால் மா மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் வாரமளவில் வழமைக்கு திரும்பும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

சந்தையில் தற்போது நிலவும் தட்டுப்பாட்டு நிலைமை வழமைக்கு திருப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.

எரிவாயு மற்றும் பால் மா சந்தையில் கிடைக்காது போகும் என்ற அச்சத்தில் அதிகளவில் கொள்வனவில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தட்டுப்பாடு நிலவும் பொருட்களை தொடர்ச்சியாக நுகர்வோர் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சமையல் எரிவாயு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதுடன், பால் மா நிறுவனங்கள் இறக்குமதிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (தினக்குரல் 16-8-21)

Previous articleயாழ்ப்பாணத்தில் கோர விபத்து இளம் பெண் தலை நசுங்கிப் பலி
Next articleமுகமட் ஆசாத்தின் தாயார் உட்பட 3 பேர் வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுதலை