நாட்டைத் திறந்தால் மூடு என்றும் மூடினால் திற என்றும் கூறும் ஒரு கூட்டம்

நாட்டைத் திறந்தால் மூடு என்றும், மூடினால் திற என்றும் கூறும் ஒரு கூட்டம் இருககத்தான் செய்கிறது. அதற்கு நாம் எமது கவனத்தை செலுத்த அவசியமில்லை. சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலையே மேட்கொள்ளவேண்டும் என்று போக்குவரத்து, பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை முடக்கத் தேவை ஏற்படின் அதுபற்றிய முடிவை சுகாதார அதிகாரிகள் மேற்கொள்வர். ஆனல் நாட்டைத் திறந்தால் ‘மூடு’ என்றும், மூடினால் ‘திற’ என்றும் கூறும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

அவர்களது கோஷத்திற்கு நாம் எமது கவனத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. எது சரி என்பதையும் எப்போது செய்ய வேண்டும் என்பதையும் சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பர். பொதுக்கள் நாட்டை முடக்கும் படி கூறுவதும் இல்லை. திறக்கும் படி கூறுவதும் இல்லை. ஆனால் அதற்கென்றே சில குழுக்கள் பாதை வழியே கோஷமெழுப்பி செயல்பட்டு வருகின்றன. நாட்டை முற்றாக முடக்கத் தேவைப்படின் அதனை செயலணியினர் அறிவுறுத்துவர்.

மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அதற்கான நியதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Previous articleதாலிபன்களின் உளவுத் திறன்கள்: சந்தேக நபர்களை கண்டறிவது எப்படி?
Next articleயாழ்ப்பாணத்தில் கோர விபத்து இளம் பெண் தலை நசுங்கிப் பலி