ரிஷாத் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் மனைவியின் சகோதருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இந் நிலையில் சந்தேக நபரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சந்தேக நபருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -வீரகேசரி-

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி