நவீன மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

அண்மைக் காலங்களில் எனக்கு அடுத்தடுத்து எமது ஊர் மற்றும் அயல் ஊர் சகோதர சகோதரிகளிடம் இருந்து பல அழைப்புக்கள் வந்தன.

செய்தி இதோ.

“சேர் எனது சகோதரி/மகன் FB யில் வெளி நாட்டைச் சேர்ந்த A என்பவருடன் நண்பனாக இருக்கிறார், அந்த வெளிநாட்டு நண்பர் தற்போது எங்களுக்கு iPhone, Laptop மற்றும் பெருந்தொகை US டொலர்களைப் பார்சலில் அனுப்பியுள்ளார், அவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு தடவைகளில் நான்கு இலட்சம் ரூபாக்களை அவர்கள் கொடுத்த கணக்கிலக்கத்திற்கு அனுப்பி விட்டோம், தற்போது சுங்கத்திணைகிளத்தில் உள்ள அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாயாக மாற்றித் தருவதற்கு இன்னும் ஒரு லட்சம் அனுப்பச் சொல்கிறார்.”

இவ்வாறு எமது மக்கள் பலரும் பெருந்தொகைப் பணத்தினை இழந்திருக்கின்றனர். பணத்தைப் பெற்ற ஆசாமிகள் இவர்களுக்கு UK தொலைபேசி இலக்கம் ஒன்றையும் இலங்கையில் இயங்கும் வங்கி ஒன்றின் கணக்கிலக்கத்தையும் கொடுத்திருக்கின்றனர்.

இவ்வாறான மோசடிகள் பெரும்பாலும் இலங்கையில் வசிக்கும் Nigeria, Pakistan மற்றும் Maldive நாட்டவர்களால் செய்யப்படுகின்றன. இன்றும் ஒருவர் தொடர்பு கொண்டு தான் ஏலவே இரண்டு தடவைகளில் ரூபா 330,000/- வை வைப்புச் செய்திருப்பதாகவும் இன்னும் 100,000/- வை அனுப்பவிருப்பதாகவும் கூறினார்,

இது ஒரு தெளிவான மோசடி என்று சொன்னால் அவர்கள் நாம் சொல்வதை நம்பாது அந்த ஏமாற்றுக் காரர்களை நம்பி தாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தினை இழந்து வருகின்றனர்.

இவ்வாறு எமக்குத் தெரியாமல் பலர் தமது பணத்தினை இழந்திருக்கவும் வாய்ப்புண்டு. இதற்கு அடிப்படைக் காரணம் பேராசை மட்டுமே.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவும்.

1. ஊர், பெயர் தெரியாத எவரும் எமக்குக் கோடிக் கணக்கான பணத்தை கொடுக்க மாட்டார்கள்.

2. கோடிக்கணக்கான பணத்தினை இலவசமாக அனுப்புபவன் ஏன் நம்மிடம் ஒரு சில இலட்சங்களை வைப்பிலிடச் சொல்கிறான்.

3. பணத்தினை பார்சல்கள் ஊடாக அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினாலும் அப்பணம் பறிமுதல் செய்யப்படும்.

இதில் கவலையான விடயம் இன்று பணத்தை இழந்தவர் ஒரு கூலித் தொழிலாளி.

அரச உத்தியோகத்தில் உள்ள சிலரும் ஏலவே பெருந்தொகைப் பணத்தை இழந்துள்ளதை நான் அறிவேன்.

ஆகவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விளிப்புடன் இருக்குமாறும் பணத்தை இழந்தவர்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Via Facebook “Muhammad Ibrahim Aminudeen

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page