மாத்தளையில் சில பிரதேசங்கள் 1 வார காலத்திற்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி திருத்தம் : எமது வாட்ஸ் அப் குழுமத்தில் “மாத்தளை நகரம் ஒரு வாரத்திற்கு பூட்டு” என்று தவறான தலைப்பில் இப்பதிவு இடம் பெற்றுள்ளதனையிட்டு மன்னிப்பு கோருகின்றோம்.

அத்துடன் மாத்தளை மாநகர பிரதேசங்களில் இப்படியான ஒரு தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாத்தளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை ஒரு வார காலத்திற்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை – சேருநுவர மற்றும் ஊவா பரணகம ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

செய்தி மூலம் : தமிழன்.lk – லிங்க் : Click Here

—————————–

மாத்தளை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் 7 நாட்களுக்கு மூடப்படுவதாக எமது செய்தி வெளியானது. எனினும் மாத்தளை பலாபத்வல, மடவள ஆகிய பிரதேசங்களிலேயே கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மாத்தளை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களும் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 

இது சம்பந்தமாக எமது செய்திச் சேவை மாத்தளை மாநகர பொது சுகாதார ஆய்வாளர்களிடம் வினவிய போது மாத்தளை மாநகர சபைக்குட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு இன்னும் எந்த தீர்மானமும் எட்டப்படவில்லையென தெரிவித்தனர்.
செய்தி மூலம் : tamilosai.lk – லிங்க் : Click Here

Previous articleநெத்தலி,கருவாடு உட்பட சில பொருட்கள் மீது விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி திருத்தம்
Next articleஇலவசமாக சிங்களம் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு