புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தயாராகிறது அரசாங்கம்

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து முக்கிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க இன்று அரசாங்கம் தயாராகிறது.

இதேவேளை, நேற்றையதினம் நாடு முடக்கப்படாதெனவும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க தீர்மானித்துள்ள அரசாங்கம், களியாட்ட விடுதிகள், மதுபான விடுதிகள், ஸ்பா உள்ளிட்ட வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price