ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்களால் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணிக்குழாமினரில் சிலருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உள்ளக பணிக்குழாமினரின் எண்ணிக்கையை மட்டுபடுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், எதிர்வரும் நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை முன்பதிவு செய்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் உரிய தினத்தில் அல்லது அதற்கு முன்னதாக குறித்த அடையாள அட்டைகளை தயார்ப்படுத்தி தபால் ஊடாக அவரிகளின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -தமிழன்.lk-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price