மாத்தளை நகரில் 60 வீதமானோருக்கு கொரோனா!

மாத்தளை நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனைகளில் 60 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை மாநகர சபையின் உப தலைவர் அமில நிரோஷன் தெரிவித்துள்ளார்.

நகரசபையின் சுகாதார பிரிவினரால் நாளாந்தம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை நகருக்குள் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவிவரும் நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் அன்றி வெளியில் நடமாடுவதை முற்றாக தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். -தமிழன்.lk-