சாணக்கியமாக காய் நகர்த்தி அரசுடன் இணக்கப்பாடான அரசியலை முன்னெடுப்போம்! –ஹாபிஸ் நஸீர்

முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும்போது எங்களுடைய வாய்கள் மூடி இருக்கா. எங்களுடைய அத்தனை குரல்களும் ஓங்கி ஒலிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கல்குடா  பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- 

இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடியோடு அழித்தொழிக்கப்பட்டு, ஐக்கிய தேசிய கட்சி அடியோடு இல்லாமல் செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு  நாடாளுமன்ற  பெரும்பான்மை உறுப்பினர்களை கையில் வைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ள வேளையிலே எதிர்க்கட்சிகளின் குரல்களை இல்லாமல் செய்து இந்த அரசாங்கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும்  இந்நிலையில்  நாங்கள் சிறுபான்மை சமூகத்தினுடைய வெவ்வேறு பிரதிநிதித்துவத்தில் பல சவால்களுக்கு முகங்கொள்ள வேண்டியிருக்கும்.

இவற்றையெல்லாம் முறையடித்து சாணக்கியமாக காய் நகர்த்தி இந்த அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டான அரசியலை எவ்வாறு செய்ய முடியும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளோம்.

ஏனெனில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளார்கள்.

எனவே இவர்களுடன்  இணக்கப்பாடான அரசியலை  எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றியதாகவே தான் எங்களுடைய அரசியல் நகர்வுகள் இருக்கும். முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும், அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கும், அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் நாங்கள் சாணக்கியமான காய் நகர்த்தல்களை நிச்சயமாக செய்வோம்.

அவ்வாறு செய்து முஸ்லிம்களுடைய உரிமைகளுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற எந்தவொரு பிரேரனைக்கும் நாங்கள் ஒருபோதும் அதற்கு கை உயர்த்தப்போவதுமில்லை. ஆதரவு வழங்கப்போவதுமில்லை. அதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற முதலாவது குரலாக எனது குரல் இருக்கும் என்றார்.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEMadawala News