இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பது சவால்மிக்கது! – ரதன தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பது சவால்மிக்கது நாட்டில் அனைத்து இன மக்களும் பொது சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக இந்த தேசியப் பட்டியல் ஆசனத்தை பயன்படுத்துவோம். வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

அபே ஜனபல வேகய’ கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கம் அதிகாரம் எனக்கு மாத்திரமே உண்டு. கிடைக்கப் பெற்ற ஓர் ஆசனம் அனைத்து தரப்புக்கும் சாபகேடாக மாறியுள்ளது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமயாக இல்லாதொழித்து அனைத்து இன மக்களும் பொது சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவே இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டோம். தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஒன்று இல்லாத காரணத்தினால் அபேஜன பல வேகய கட்சியில் போட்யிட்டோம். ஞானசார தேரர் உட்பட தேர்தலில் போட்டியிட தீர்மானித்தவர்கள் அனைவரும் இக்கட்சியில் கூட்டணியமைத்தோம். அப்போது கூட்டணியின் பொதுச்செயலாளராக நான் நியமிக்கப்ட்டேன்.

தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் கூட்டணிக்கு உண்டு என்பதை எழுத்து மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளோம். இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் எமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எமக்கு ஊடகங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை.

பாரிய சவால்களுக்கு மத்தியில் பொதுத் தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகளை பெற்றோம். எமக்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது அனைவருக்கும் சாபக்கேடாக மாறியுள்ளது அமைக்கப்பட்ட கூட்டணியின் பிரகாரம் தேசிய பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அபே ஜனபல வேகய கட்சிக்கு கிடையாது. தேசிய பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எமக்கு மாத்திரமே உண்டு.

Read:  மீண்டும் ரணில் !!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பது சவால்மிக்கது நாட்டில் அனைத்து இன மக்களும் பொது சட்டத்துக்கு அடிபணிய வேண்டும். என்பதற்காக இந்த தேசியப் பட்டியல் ஆசனத்தை பயன்படுத்துவோம். வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEMetro News