lunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

உக்கிச் செல்லாத lunch sheet பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் தயாரிப்பு விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தடையும் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள lunch sheetகளை மாத்திரம் விற்பனை செய்துக்கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் lunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

lunch sheet தடை திட்டத்திற்கு நாட்டிலுள்ள பிரதான வர்த்தக வலையமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -தமிழன்-

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter